2020, மே3: நடப்பு கல்விஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

டில்லி:

டப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அடுத்த வருடம் (2010) மே மாதம் 3ந்தேதி நாடு முழுவதும், மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு  வெளியிட்டு உள்ளது.

நடப்பு கல்வி ஆண்டு (2019-20) தொடங்கி இரண்டரை மாதங்கள் கடந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

அதன்படி,  2020ஆம் ஆண்டு மே3ஆம் தேதி நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் டிசம்பர் 2ந்தேதி தொடங்கி டிசம்பர் 30ந்தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு மார்ச் 27ந்தேதி முதல் வழங்கப்படும்

என்றும் நீட் தேர்வு முடிவு ஜூன் 4ந்தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.