ஜெஇஇ, நீட் தேர்வுகள்: காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி முதல்வர்களுடன் சோனியா இன்று ஆலோசனை…

டெல்லி: மத்தியஅரசு, ஜெஇஇ, நீட் தேர்வுகளை நடத்துவதில் பிடிவாதம் காட்டி வரும் நிலையில், இது தொடர்பாக, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள்  மற்றும் எதிர்க்கட்சி முதல்வர்களுடன் சோனியாகாந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜெஇஇ (முதன்மை) மற்றும் நீட் (NEET)  தேர்வுகளை நடத்து வதற்கான தகவல்கள் தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும் நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும்  வெளியிடப் பட்டு உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும்  மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநில முதல்வர்களுடன் ஆலோ சனை நடத்த நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனையின்போது,  நீட், ஜெஇஇ தேர்வு , ஜிஎஸ்டி பிரச்சினை, கொரோனா பிரச்சினை உள்பட என்று பல்வேறு விஷயங்களை   விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று (புதன்) மதியம் 2.30 மணிக்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடக்க உள்ளது.

மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வருவதில் தீவிரம் காட்டும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் . மாநில அரசுகள் நீட் தேர்வை அனுமதிக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக கூறட்பபடுகிறது.