நெட்டிசன்:

(வாட்ஸ்அப் பதிவு)

நீட் தேர்வு இல்லாதிருந்தபோது…..

அரசுப்பணியில் ஐந்துவருடங்கள்,ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் மனநலத்துறைப் பேராசிரியராக பணிபுரிந்திருக்கிறேன்.

முதல் வகுப்பின்போது,என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பின் மாணவர்களை அறிமுகப்படுத்திக்கொள்ள சொல்வேன்.

பெரும்பாலும் அவர்கள் சாதாரண ஊர்களிலிருந்து அரசுப்பள்ளி அல்லது மாநகராட்சி பள்ளியிலிருந்து வந்திருப்பார்கள்.

கிராம நகர ட்ரான்சிஷனில் கொஞ்சம் கூச்சம் அவர்களிடம் மீதம் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.உடை மற்றும் காலணிகள் சாதாரணமாக இருக்கும்.

ஒரு தடவை மாணவன் கையில் இருந்த பேனாவின் கீழ்ப்பகுதி ஒரு கலரிலும், மேல்மூடி சரியாகப் பொருந்தாமல்,வேறு கலரில் இருந்து,கைகளைக் கறை செய்ததைப் பார்த்தபோது,மிகவும் கஷ்டமாக இருந்தது.(மருத்துவம் படிக்கும் அந்த மாணவனிடம்,ஒரு நல்ல பேனாகூட இல்லை என்பது என்னைக் காயப்படுத்தியது)

நான்கு வருடங்களுக்குப் பிறகு, நீட் இல்லாமல், மாநில கல்வி திட்ட தேர்வுமூலம் ஸ்டான்லிக்கு வந்த அதே மாணவனை சந்தித்தபோது சொன்னான்””சார்,ஆல் இண்டியா PG எக்ஸாமில் நல்ல ரேங்க் வாங்கியிருக்கேன். அநேகமாக ” மெளலானா ஆஸாத் கல்லூரியில் ( டெல்லி) மெடிசின் கிடைக்கும் என்று சொன்னபோது,மனசு சந்தோஷப்பட்டது.

எம் மாணவர்களுக்கு நீட் பிரச்னையேயில்லை.
நீட் தேர்வு இல்லாமல், எம் பி பி எஸ் நுழைந்து பின் மத்திய அரசு நடத்தும் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, புகழ்பெற்ற கல்லூரிகளில் நுழைய முடிகிறது.

பின் எது பிரச்னை?

12 வருடங்கள் ஒரு பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, பின் வேறொரு பாடத்திட்டத்தின் கீழ், கேள்விகள் கேட்பது என்பது தேவையில்லை என்றுதான் சொல்கிறோம்.

அனிதாவின் மதிப்பெண்கள் அவருக்கு பொதுப்பிரிவிலேயே, மருத்துவ சீட்டினைப் பெற்றுக் கொடுத்திருக்கும்.

கனவுகள் களவுபோயின…

அந்த குடும்பம் ஒரு உறவினை இழந்தது…

அந்தசிற்றூர் ஒரு நல்ல மருத்துவரை இழந்தது…

தமிழகம் சமூக நீதியை இழந்தது…

Dr.TV .Asokan psychiatrist, 
Stanley medical college
President, Indian Psychiatric Society