சென்னை,

தாம்பரத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் மத்திய அரசின் நீட் தேர்வு காரணமாக அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் தமிழக எதிர்க்கட்சிகள் சார்பில் திருச்சியில்  நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்., நீட் தேர்வுக்கு எதிராக வரும் 13-ம் தேதி எதிர்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என்று அறிவித்தார்.

அதன்படி சென்னை தாம்பரத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மு.க.ஸடாலின்,

சென்ன வள்ளுவர் கோட்டம் அருகே திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதில், ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, பழ.கருப்பையா உள்பட அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டனர்.

அதேபோல சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன், திமுக மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது   மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பட்டன. இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.