டில்லி, 

வியாபம் ஊழல் போன்றே ‘நீட்’ தேர்விலும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக முன்னாள் ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த டாக்டர் ஆனந்த் ராய் தெரிவித்து உள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு எப்படி ‘வியாபம்’ ஊழல்கள் நடைபெற்றனவோ,  அதேபோன்றே கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான தேசியத் தகுதி-நுழைவுத் தேர்வு என்னும் ‘நீட்’ தேர்விலும் ஊழல்கள் நடந்துள்ளன.

தேர்வு நடைபெற்ற கம்ப்யூட்டரில் மோசடிகள் செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீட் தேர்வில், மாணவர்கள் தேர்வு எழுதிய கேள்வித்தாளை, முன்பே வெளியாகும் விதத்தில் கணினியில் உள்ள மென்பொருள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஆனந்த்ராயின் குற்றச்சாட்டுக்கள் குறித்து மத்திய அரசு இதுவரை எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.

எனவேதான் நான் இவற்றின்மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டில்லி ஐகோர்ட்டை அணுகி இருப்பதாக கூறி உள்ளார்.

கோரி அணுகியிருக்கிறேன்,” என்றார்.

இவ்வாறு ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் டாக்டர் ஆனந்த்ராய்.