தமிழகத்தில் அந்தந்த மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுதலாம்….பிரகாஷ் ஜவடேகர்

சென்னை:

தமிழக மாணவர்கள் அந்தந்த மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும்என்று மத்திய மைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘தமிழக மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் அந்தந்த மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். நீட் கேள்வித்தாள் தமிழில் தயாரிக்க நல்ல மொழி பெயர்ப்பாளர்களை மாநில அரசு அனுப்ப வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை விரைவில் கொண்டு வரப்படும். அனைத்து கல்வி வாரியங்களையும் ஒன்றாக இணைக்கும் திட்டம் இல்லை.தமிழகத்திலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கூடுதலாக தொடங்கப்படும்’’ என்றார்.