டெல்லி: நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது.

 

 

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவ படிப்புகளில் சேரவும் நீட் தேர்வு கட்டயாமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந் நிலையில் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை தேசிய தேர்வுகள் ஆணையம் உயர்த்தி உள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வுகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

 

பட்டியலின பிரிவினருக்கான தேர்வு கட்டணம் ரூ.2,750ல் இருந்து ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பொது, ஓபிசி பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.3,750ல் இருந்து ரூ.5,015ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணத்தில் ஜிஎஸ்டி வரியாக பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.