நீட் தேர்வு முடிவுகள் குளறுபடி: இணையதளத்தில் நீட்நுழைவுத்தேர்வு முடிவை நீக்கியது தேசிய தேர்வு முகமை

டெல்லி: நீட் தேர்வு முடிவு வெளியானதில் ஏராளமான குளறுபடிகள் இருந்ததுதெரிய வந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இருந்து நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவு நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து NTA  இணைய தளத்தில்,  நீட் முடிவு நீக்கப்படலாம் அல்லது தற்காலிகமாக பார்க்க முடியாது என தெரிவித்து உள்ளது. இந்த குளறுபடி என்பது பிரிண்டிங் தவறால் ஏற்பட்டுருக்கலாம் என்றும் இதற்கான புதிய அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று தேசிய முகமை தேர்வு அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிகம் பேர் தேர்ச்சி, மாநில தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.  அதையடுத்து,  நீட் தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு முடிவில் குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதுபோல,  தேர்வு எழுதிய எண்ணிக்கையில் குளறுபடி இருக்கும்போது மதிப்பெண்களிலும் முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.