சென்னை,

ந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் மத்திய அரசின் சிபிஎஸ்சி நடத்தும் நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு மூலமே நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து  நீட் மூலமே மருத்துவ மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மத்திய அரசும் அறிவித்து உள்ளது.

மத்திய அரசும் நடத்தும் நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நடைபெற இருப்பதால், தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

இதன் காரணமாக தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி ஜனாதிபதியின் ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு அனுப்பியது.

ஆனால், மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை செவிமடுக்கவில்லை. இதுகுறித்து  தமிழக அரசு மத்தியஅரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை மத்தியஅரசு நிராகரித்து விட்டது.

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபந்தாமன் நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

தமிழக மாணவர்களை நீட் தேர்வு எழுத சொல்வது வன்முறைக்கு ஒப்பானதாகும் என்றார்.

மேலும், இதுபோன்ற விவகாரங்களில், மத்திய அரசு  மாநில அரசுகளின் உரிமை பறிக்கிறது என்றும், நீட் விவகாரத்தில் 7 கோடி தமிழ் மக்களின் உரிமையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.