Random image

2019ம் ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும்: பிரகாஷ் ஜவ்டேகர்

டில்லி:

டுத்த (2019) ஆண்டு முதல் தேசிய அளவிலான நீட்  மருத்துவ நுழைவு தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்து உள்ளார்.

இதுவரை நீட், ஜேஇஇ  போன்ற தேசிய அளவிலான  தேர்வுகளை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தி வந்த நிலையில், இனிமேல் சிபிஎஸ்இ நடத்தாது என்றும்,  என்டிஏ எனப்படும்  தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) நடத்தும் என்றும் மத்திய  மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

வருடத்திற்கு இரண்டு முறை நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும் என்றும், பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ள அமைச்சர்,   இந்த தேர்வுகள் அனைத்தும்  ஆன்லைன் மூலேமே நடைபெறும் என்றும் கூறி உள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாகவும், சிபிஎஸ்இ கல்வி திட்டத்தில் மட்டுமே வினாக்கள் தயார் செய்யப்பட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது என்றும்,  தேசிய தேர்வு முகமை நடத்தும் என மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல்,  நீட் தேர்வு ஆன்லைன் மூலமே  நடத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.