நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்….ஆன்லைன் முறை ரத்து: மத்திய அரசு

டில்லி:

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 2 முறை பிப்ரவரி, மே மாதங்களில் நடத்தப்படும் என கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது.
இத்துடன் இன்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வும் நடத்தப்படும் என்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது.

இந்த தேர்வுகள் முற்றிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். எனவும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய திறனாய்வு நிறுவனம், இந்த தேர்வுகளை நடத்தும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும். ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறாது. 2019ம் ஆண்டு மே 5ம் தேதி நீட் தேர்வு நடைபெறும். ஜேஇஇ நுழைவுத் தேர்வு 2019 ஜனவரி 6 முதல் 20ம் தேதி வரை நடைபெறும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.