இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

டில்லி

ன்று மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கொரோனா அச்சுறுத்தலால் தள்ளி வைக்கப்பட்டது.

கடந்த மாதம் 13 ஆம் தேதி அன்று நாடெங்கும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடந்தது.

இதில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்தோர் தேர்வு எழுதவில்லை.

அவர்களுக்காக இரண்டாம் கட்டமாகக் கடந்த 14 ஆம் தேதி நீட் தேர்வு நடந்தது.

மொத்தம் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர்.

இன்று இந்த தேர்வுகளின் முடிவுகள் இணையத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை மாணாக்கர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமையின் இணைய தளமான www.nta.ac.in மற்றும், www.ntaneet.nic.in இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வு முகமை அறிவித்துள்ளது