சென்னை,

டுத்த ஆண்டு முதல் எஞ்சினீயரிங் படிப்புக்கும் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதை தடுக்க முடியாது என்று என்று தமிழக கல்வி அமைச்சர் தெரிவித்திருப்பது, தமிழக அரசின் கையாலாத தனத்தையே காட்டுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையான வகையில், பாடத்திட்டங்களை மாற்றாத நிலையில், தமிழகத்தில் எஞ்சினியரிங் படிப்புக்கும் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெறும் என்பதை மறுக்க முடியாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தி ருக்கிறார்.

இது மாணவ மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே மருத்துவ நுழைவு தேர்வு காரணமாக கடும் மன உழைச்சலுக்கு ஆளாகி உள்ள தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், தற்போது எஞ்சினீயரிங்குக்கும் நீட் தேர்வு என்பதால் மேலும் கலக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை படிப்புகளுக்கான பட்டமளிப்பு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அடுத்த ஆண்டுக்கான இன்ஜினியரிங் படிப்புகளில் நீட் தேர்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என என்னால் உத்தரவாதமளிக்க முடியாது  என கூறி உள்ளார்.

மேலும், மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளும் போது தமிழகமும் அதனை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்றும், ஆனாலும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

தமிழக அமைச்சர்கள், நீட் தேர்வை எதிர்கொள்ள தேவையான பாடத்திட்ட மாற்றங்களை நடவடிக்கை எடுக்காமல், தங்களால் நீட் தேர்வை தடுக்க முடியாது என்று கைவிரிப்பது, தமிழக அமைச்சர்களின் மற்றும் அரசின் கைலாகாததனத்தை காட்டுவதாக உள்ளது.