சென்னை:

2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசு தலைவர் நேற்று வேலூரில் சிஎம்சி மருத்துவ கல்லூரி விழாவில் பங்குகொண்டார். அதைத்தொடர்ந்ந்து நாராயணி பீடம் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

இன்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு இதுவரை  ஒப்புதல் அளிக்காத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசு மருத்துவர்கள் இன்று கருப்புப் பட்டை அணிந்து  பணிக்கு செல்வதாக அறிவித்து உள்ளனர்.

மேலும்,  நீட் தேர்வுக்கு விலக்கு, முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் வரை குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட மத்திய அரசு பிரதிநிதிகள் யாரையும் தமிழகத்தில் நடக்கும் விழாக்களுக்கோ, பிற கூட்டங்களுக்கோ அழைப்பதைத் தமிழக நலனில் அக்கறை கொண்ட யாவரும் தவிர்க்க வேண்டும் என்றும் என்றும் கோரி உள்ளனர்.