நீட் ஒரு அரச பயங்கரவாதம்!! இயக்குனர் ராம்

--

சென்னை:

நீட் அமல்படுத்தப்பட்டதால் மருத்துவ கல்வியில் சேர முடியாத விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் கண்டனமும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில் திரைப்பட இயக்குனர் ராம் கூறுகையில், ‘‘நீட் ஒரு அரச பயங்கரவாதம். 12 வருட உழைப்பை, கனவை, அனிதாவை படுகொலை செய்த பயங்கரவாதம்’’ என்று தெரிவித்துள்ளார்.