சென்னை,

ருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான தேசிய அளவிலான  நீட் நுழைவு தேர்வு கடந்த 7ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.

மொத்தம் 104 இடங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

நீட் தேர்வு எழுதவந்த மாணவர், மாணவிகளிடையே ஆசிரியர்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். சோதனை என்ற பெயரில் அவர்களின் ஆடைகளை களைந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.

இதை கண்டித்து இன்று சென்னை சிபிஎஸ்இ அலுவலகத்தை மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நீட் தேர்வில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்திய முற்றுகைப் போராட்டத்தில், சிபிஎஸ்இ அலுவலகம் மீது கல்வீசித் தாக்கியுள்ளனர்.

நீட் தேர்வு அறையில் பொதுச் சோதனை என்ற பெயரில், மாணவர்களை மோசமான முறையில் தேர்வர்கள் கையாண்டார்கள் என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பல சர்ச்சைகள் நிறைந்த நீட் தேர்வை, தமிழகத்தில் ரத்துசெய்யவேண்டுமென இந்திய மாணவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.