நீட்,ஜேஇஇ தேர்வுக்கு தடை கேட்டு 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு… இன்று விசாரணை

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நீட். ஜேஇஇ தேர்வுகளுக்கு தடை கேட்டு 6 மாநிலங் கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதி மன்றம் மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில், தேர்வு நடத்தலாம் என பச்சைக்கொடி காட்டியது. அதைத்தொடர்ந்து, ஜெஇஇ தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கங்கள்,  நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

மேற்குவங்கம், ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், மஹாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்கள் சார்பில் ஆகஸ்ட் 28-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே தேர்வுகள் தொடங்கி உள்ள நிலையில், தேர்வுக்கு தடை விதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.