முதுநிலை பல் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு

டெல்லி: முதுநிலை பல் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தேர்வு  டிசம்பர் 16ம் தேதி நடைபெறும் என  தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை மத்தியஅரசு கட்டாயமாக்கி உள்ளது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிந்து, கலந்தாய்வு தொடங்கி உள்ளது. இந்த நிலையில்,  முதுநிலை பல் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு நவம்பர் 15ம் தேதிக்குள் https:/nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.