16 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் வெளியானது…!

--

டெல்லி: நாடு முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் எதிரொலியாக நீட் நுழைவுத் தேர்வு தாமதமாக கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வை  நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர். கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் சிக்கி தேர்வெழுதாத மாணவர்களுக்கு நேற்று முன்தினம் மறு தேர்வு நடந்தது.

அதில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுதினர். இதையடுத்து 2  கட்டங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேசிய தேர்வு முகமையின் இணைய தளமான www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in, ஆகிய இணையதளங்களில்  மாணவர்கள் தேர்வு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

You may have missed