‘நீட்’: மகளின் மருத்துவ கனவு நிறைவேறாததால் தாய் தற்கொலை!

வேலூர், 

மிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காத காரணத்தால், தமிழக பாடத்திட்டத்தின் மூலம் படித்த மாணவியின் டாக்டர் கனவு பொய்த்து போனதால்,  அந்த பெண்ணின் தாய் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

தமிழக அரசு கொண்டுவந்த நீட் அவசர சட்டத்துக்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு காரணமாக, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று  உச்சநீதி மன்றமும், மத்திய அரசும் தமிழகத்துக்கு மாபெரும் துரோகம் செய்துள்ளது.

இதன் காரணமாக தமிழக பாடத்திட்டத்தில் படித்து மருத்துவர் ஆவோம் என்ற தமிழக மாணவர்களின் கனவு வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது மகளுக்கு  மருத்துவ படிப்புக்கு ‘சீட்’ கிடைக்காது என்ற பயத்தால் தலைமை ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம், வேலூர் அருகே நடைபெற்றுள்ளது. வேலூரை அடுத்த பாகாயம் அண்ணாநகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம்,  நித்தியலட்சுமி தம்பதியினர். இவர்களது மகள்   அபிதாஸ்ரீ ( வயழ 17) . இவர்  பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றார். ‘நீட்’ தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஆனால், நேற்று உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு காரணமாக,  நித்தியலட்சுமி தனது மகளுக்கு மருத்துவப் படிப்புக்கு ‘சீட்’  கிடைக்காது என அவர் நினைத்து தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு மற்றும் மத்திய அரசின் வஞ்சகமா காரணமாக, ஒரு மாணவியின் தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'Neet': Mother's suicide does not fulfill daughter's medical dream, 'நீட்': மகளின் மருத்துவ கனவு நிறைவேறாததால் தாய் தற்கொலை!
-=-