நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங். கூட்டணி எம்.பி.க்கள் பதாதைகளுடன் ஆர்ப்பாட்டம்

டில்லி:

மிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி, மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி வருகிறது. இதை கண்டித்து, தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பதாதைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மருத்துவ படிப்புகளுக்கு மத்தியஅரசு நடத்தி நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி  டில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி உள்ள நீட் தேர்வு மற்றும், தற்போது அறிவித்துள்ள நெக்ஸ்ட் தேர்வை கண்டித்சூது  திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பாராளுமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.