Random image

நீட் வினாத்தாள் குளறுபடி: உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு

மதுரை:

நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ கல்வி வாரியம் சர்வாதிகார போக்குடன் செயல்பட்டதாக மதுரை உயர்நீதி மன்ற கிளை ஏற்கனவே  குற்றம் சாட்டிய நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் பெரும் குளறுபடியாக இருந்தது. ‘ தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டதில் 40க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக இருப்பதாகவும், அதற்காக கருணை  மதிப்பெண் கள் வழங்க வேண்டும் என்றும் கூறி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்குகிறது.

இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணையின்போது, சிபிஎஸ்இ கல்வி வாரியத் துக்கு பல கேள்விகளை எழுப்பிய நீதி மன்றம், கடந்த வார விசாரணையின்போது , நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் தவறான விடை என தெரிந்தும் பெரும்பாலான வகையில் முடிவெடுத்தது எந்தவகையில் நியாயம்?   நீட் தேர் வில், பீகார் மாணவர்கள் மட்டும் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி? என்ற நீதிபதிகள்,  வழக்கு நிலுவையில் இருந்தபோதே தேர்வு முடிவை வெளி யிட்டுத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.  சிபிஎஸ்இ கல்வி வாரியம் சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது என்றும் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது ஆகியோர் விசாரித்து வந்தனர்.  இந்த நிலையில், இந்த மனு மீது இன்று மதுரை உயர்நீதி மன்ற கிளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்து உள்ளது.