நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகாரம்: மதுரை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

 மதுரை:

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ கல்வி வாரியம் சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்வதாக மதுரை உயர்நீதி மன்ற கிளை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள், தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டதில் 40க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக இருப்பதாகவும், அதற்கான மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும  கூறி, நீட் தேர்வு முடிவு அறிவிக்க  தடை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் எம்.பி. மதுரை உயர்நீதி மன்ற கிளையில் கடந்த ஜூன் மாதம் (நீட் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்புஸ்ரீ  வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால், வழக்கு கடந்த மாதம் (ஜூன்)  4ந்தேதி நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வர இருந்த நிலை யில், சிபிஎஸ்இ கல்வி வாரியம், உச்சநீதி மன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்து, அனுமதி பெற்று அவசரம் அவசரமாக தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

இது சர்ச்சையை கிளப்பியது. நீட் தேர்வில்  தமிழக மாணவர்களின் மதிப்பெண்கள் குறைய  இது காரணமாகவும் அமைந்தது.  சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின்  அடாவடி முடிவு குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசோ மவுனம் சாதித்து வந்தது.

இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, சிபிஎஸ்இ கல்வி வாரியம் தமிழகத்தில் தர வரிசை பட்டியல் வெளியிடப்படாது என்று கூறியிருந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த 2ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, கேள்வித்தான் மொழி மாற்றம் செய்தது குறித்து பல்வேறு கேள்விகளை நீதிமன்றம்  சிபிஎஸ்இ கல்வி வாரியத்திற்கு எழுப்பி விளக்கம் அளிக்கும்படி  கேட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும்  நீதிபதிகள் சி.டி.செல்வம், பசீர் அகமது முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தை கடுமையாக சாடினர்.

நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் தவறான விடை என தெரிந்தும் பெரும்பாலான வகையில் முடிவெடுத்தது எந்தவகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம்,  வழக்கு விசாரணையில் இருந்தும் முன்பே தேர்வு முடிவை வெளியிட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது.

நீட் தேர்வில், பீகார் மாணவர்கள் மட்டும் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி? என்ற நீதிபதிகள் சிபிஎஸ்இ கல்வி வாரியம் சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

அதைத்தொடர்ந்து இந்த  வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது