நீட் தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி வெளியிடப்படும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறி உள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் வரும் 16ம் தேதி வெளியாகும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ்  பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம் மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த பதிவில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். முன்னதாக, கொரோனா பாதிப்பு, லாக்டவுன் காரணமாக நீட் தேர்வை எழுதத் தவறிய மாணவர்களுக்கு வரும் 14ம்  தேதி தேர்வு நடத்த நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.