டில்லி,

கில இந்திய அளவில் நடத்தப்பட்ட மருத்துவ மாணவர் படிப்பிற்கான நுழைவு தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்றுவெளியிடப்பட்டது.

நீட் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (‘நீட்’) கடந்த மே 7-ந் தேதி நடைபெற்றது.  இந்த தேர்வின் முடிவு ஏற்ககனவே  ஜூன் 8-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதுகுறித்து பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற வழக்குகளில் தடை விதித்ததன் காரண மாக தேர்வு முடிவு வெளியானதில் தாமதம் ஏற்பட்டது.

உச்சநீதி மன்றத்தில் சிபிஎஸ்இ வாரியம் மனு தாக்கல் செய்ததையடுத்து, மாநில கோர்ட்டுக்குள் விதித்த  தடையை நீக்கி உச்சநீதி மன்றம் அனுமதி அளித்தது.

அதைத்தொடர்ந்து  மருத்துவக் கல்லூரி களில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வின் ஓஎம்ஆர் விடைத்தாள் பிரதி, விடைகள் 15-ம் தேதி வெளியிடப்பட்டன.

அதைத்தொடர்ந்து நீட்  நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.

www.cbseresults.nic.in ,

www. cbseneet.nic.in.