சென்னை:

ந்த ஆண்டு நீட் தேர்வை எழுதும் பல மாணவர்களுக்கு  வெளி மாநிலத்தில் தேர்வு மையத்தை சிபிஎஸ்இ கல்வி வாரியம் ஒதுக்கி உள்ளது. இது தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், வெளி மாநிலம் சென்று நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் வரும் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பல மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் இந்த ஆண்டு வேறு மாநிலங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு அவரவர் மாநிலத்திலேயே தேர்வு எழுத சிபிஎஸ்இ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,  வெளி மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர அரசியல் கட்சிகள் அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் கோவையில்   செய்தியார்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லும் மாணவர்கள் மற்றும் அவருடன் செல்லும் பெற்றோருக்கு விமான கட்டணம், தங்கும் வசதி உள்ளிட்டவைகளை அரசு செய்ய வேண்டும் என்று அரசு  கோரிக்கை விடுத்தார்.

இதுபோல தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.