நீட்- தவறான வினா வழக்கு: உச்சநீதி மன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு

டில்லி:

நீட் தேர்வு வினாக்களை  தமிழில்  மொழி மாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

மதுரை உயர்நீதி மன்ற கிளையின், தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும்,  தமிழில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கருணை மதிப்பெண் வழங்கிய பின்னர், 2 வாரத்தில் புதிதாக தரவரிசை பட்டியல் வெளியிட்டு, அதன்பிறகு மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதன் காரணமாக  காரணமாக, 2ம்கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ, சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில், ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து, கருணை மதிப்பெண் உத்தரவு பெற்ற  கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன்  கேவியட் மனு தாக்கல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

You may have missed