டில்லி

ந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் 131 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தி உள்ளனர்.

சுதந்திர இந்தியாவின் முதல்  பிரதமர் ஜவகர்லால் நேரு கடந்த 1889 ஆம் வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி அலகாபாத் நகரில் பிறந்தார்.  அவருடைய தாயார் பெயர் ஸ்வரூப் ராணி நேரு மற்றும் தந்திஅயார் மோதிலால் நேரு ஆவார்கள்.   இவர் பாரிஸ்டர் படிப்பு படித்தவர் ஆவார்.  மிக பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த இவர் காந்தியின் முக்கிய சீடர்களில் ஒருவர் ஆவர்.

இவர் சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார்.  இவருடைய மனைவியின் பெயர் கமலா நேரு ஆகும்.  இவருடைய ஒரே மகள் இந்திரா காந்தி.   இவர் கடந்த 1947 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு அவர் மரணம் அடையும் வரை பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.  இவர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார்.

இவருடைய பிறந்த நாளான நவம்பர் மாதம் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  இன்று அவர் 131 ஆம் பிறந்த நாளையொட்டி டில்லியில் உள்ள அவர் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தி உள்ளனர்.