‘‘தலித் ஆகிய நான் எம்எல்ஏ ஆக நேரு தான் காரணம்’’…பாஜக மூத்த தலைவர்
டில்லி:
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் ஷானப்பா. பாஜக மூத்த தலைவரான இவர் எம்.பி., எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். தலித் சமூகத்தை சேர்ந்த இவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் ஷானப்பா கூறுகையில்,‘‘நான் குடிசைப் பகுதியை சேர்ந்த ஒரு தலித். நான் எம்எல்ஏ.வாகவும், மேலவை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகிக்க காரணம் ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் கட்டமைத்த ஜனநாயகம் தான் காரணம்’’ என்று தெரிவித்துள்ளார்.