நெல் ஜெயராமன் இழப்பு மரபுவழி விவசாயத்திற்கு பேரிழப்பு: சகாயம் இரங்கல்

சென்னை:

நெல் ஜெயராமன் இழப்பு மரபுவழி விவசாயத்திற்கு பேரிழப்பு என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பாரம்பர்ய மிக்க நமது நாட்டு  நெல் ரகங்களை மீட்டெடுத்ததில் முக்கியப் பங்காற்றி வந்தவர் நெல் ஜெயராமன்.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிரா மத்தைச் சேர்ந்த இவர், நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரியம் மிக்க நெல்  ரகங்களை மீட்டுள்ளார்.  ஒவ்வொரு ஆண்டும்,  திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை  நடத்தி வந்தார்.

சமீப காலமாக புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளா அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலி, மதிமுக தலைவர் வைகோ உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நல் ஜெயராமன் மறைவு குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நெல் ஜெயராமன் இழப்பு மரபுவழி விவசாயத்திற்கு பேரிழப்பு என்றும், பசுமை புரட்சிக்கு முன் தமிழகத்தில் 30,000-க்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்தன என்றும் பசியை போக்கிட மட்டுமின்றி பாரம்பரிய நெல் வகைகளை காத்தவர் நெல் ஜெயராமன் என்றும் அவரை பெருமைப்படுத்தி  கூறியுள்ளார்.