நெல் ஜெயராமன் காலமானார்

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் இன்று அதிகாலை 5.20 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 50

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன், இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி வந்தவர்.   நம்மாழ்வாரின் வாரிசு என கொண்டாடப்பட்டவர்.

இவர் யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை விளைவித்து வந்தவர். வருடாவருடம் தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி பலருக்கும் பயிற்சி அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

 

நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு தலா 1 கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக அளித்தார். . அந்த நெல்விதைகளை பெற்றுச் செல்லும் விவசாயிகள் தங்களின் நிலத்தில் அதை விளைவித்து, இயற்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்வர். மறு வருட நெல் திருவிழாவின் போது 4 கிலோவாக திரும்ப அளிப்பர். அதை  புதிய நான்கு விவசாயிகளுக்கு இலவசமாக அளிப்பாள் நெல் ஜெயராமன்.

இதனால் லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளான ஜெயராமனுக்கு  அப்பல்லோ கேன்சர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் அளிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் நேற்று அவர் மரணமடைந்துவிட்டதாக வதந்தி பரவியது. அதை அவரது உறவினர் ராஜூ மற்றும் விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் மறுத்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி நெல் ஜெயராமன் உயிரிழந்தார்.

நெல் ஜெயராமனின் உடல்  மருத்துவமனையிலிருந்து தேனாம்பேட்டை இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

முகவரி:

23/2, 2வது தெரு,
இரத்தினா நகர்,
தேனாம்பேட்டை,
சென்னை. 18.
(அப்பல்லோ கேன்சர் மருத்துவமனை பின்புறம்)

#nelljeyaraman #passesaway