நெல்லை: மரத்தில் குழந்தை சடலம்! வீசியது யார்?

நெல்லை:

கொக்கிரக்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள புதரில்  உள்ள மரக்கிளையில் ஆ ண்குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மரக்கிளையில் தொங்கும் குழந்தையின் உடல்
மரக்கிளையில் தொங்கும் குழந்தையின் உடல்

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அருகே உள்ளது கொக்கிரக்குளம். இந்த ஊரை ஒட்டி தாமிரபரணி ஆறு செல்கிறது. ஆற்றங்கரைமரம், செடி கொடிகள் சூழ்ந்து புதர் மண்டி உள்ளது. இந்த புதரில் உள்ள மரத்தின் கிளையில் ஒன்றில் ஆண் குழந்தை சடலம் தொங்கிகொண்டு இருந்தது.

ஆற்றில் குளிக்க வந்தவர்கள் இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரத்தில் சடலமக தொங்கிய குழந்தை பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என தெரிய வந்துள்ளது. குழந்தை யாருடையது, எங்கே பிறந்தது என்ற விவரம் தெரியவில்லை. யாரும் கடத்தி வந்து கொலை செய்திருப்பார்களோ அல்லது கள்ளக்காதலில் பிறந்த   குழந்தையா? என்பது தெரியவில்லை. யாரோ கல்மனம் படைத்த மர்ம நபர்  குழந்தையை இங்கே வீசிவிட்டு சென்றிருப்பது தெரிகிறது.  குழந்தையை உயிருடனே வீசினார்களா அல்லது இறந்த குழந்தையை வீசினார்களா என்பதும் தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கார்ட்டூன் கேலரி