மீட்கப்பட்ட முத்தையா

ரேபரேலி,

உ.பி. மாநிலத்தில் பிச்சையெடுத்து வந்த நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் மீட்கப்பட்டுள்ளார்.

உ.பி. மாநிலம் ரேபரேலி பகுதியில் வயதான ஒருவர் கடந்த சில மாதங்களாக பிச்சை எடுத்து சாலையோரம் தங்கி வாழ்ந்து வந்தார். அவரை கவனித்து வந்த அந்த பகுதியில் அவரின் நடவடிக்கை குறித்து ஆராய்ந்தனர்.

அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து அவருடைய ஆதார் கார்டை பெற்ற அந்த பகுதியினர், அதன் மூலம் அவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என கண்டுபிடித்தனர்.

அவரது பெயர் முத்தையா என்பதும், அவர் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து அவர்  குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த 6 மாதத்துக்கு முன்பு  ரெயில் மூலம் வடமாநில சுற்றுலா வந்த முத்தையாவை மர்ம நபர்கள் யாரோ கடத்திச் சென்று  தொடர்ந்த போதை ஊசி  போட்டு அவரிடம் இருந்த உடமைகள் மற்றும் பணங்களை கைப்பற்றிவிட்டு அவரை ரோட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதிக போதை ஊசி போடப்பட்டதால் அவர் சுயநினைவின்றி சாலையோரங்களில் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.

தொழிலதிபர் முத்தையா மீட்கப்பட்டது அவரது குடும்பத்தாரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.