நெட்டிசன்:
பத்திரிகையாளர் விஜய் முனியாண்டி (vijay muniyandi)  அவர்களின் முகநூல் பதிவு:
டந்த வாரம் பத்திரிக்கை நண்பர்களோடு குற்றாலம் சென்றிருந்தோம். அந்த நேரம் கார்த்திகை ஒன்று இன்று சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நண்பர் கார்த்திகை செல்வன் சொல்ல அந்த மண்ணின் மைந்தர்களான நண்பர்கள் ரமேஷ் ,குமார், உதவியோடு புகழ் பெற்ற சிவசைலம் கோவிலுக்கு சென்று வழிபட்டோம்.
15135969_1034156656706231_7810146764827684087_n
வழிபட்டு அமைதிக்காக கோவிலின் மையத்தில் அனைவரும் அமர நம் அருகில் வந்து அமந்தார். ஒரு சிவாச்சாரியார் அவரிடம் அக்கோயிலை பற்றி கேட்டு கொண்டிருந்தோம். அப்போது அவர் அங்கிருந்து சுமார் பத்து கீ.மீ.அருகில் இருக்கும் பாப்பான்குளம் சிவன் கோவில் லிங்கம் சந்திரகல்லால் ஆனது அங்கு சென்றால் நல்ல வைப்ரேசன் இருக்கும் என்று சிவா சொல்ல கோவிலை தேடி நகர்ந்தோம்.
போகும் வழியில் பாப்பான் குளத்தில் வேறு ஒரு கோவிலை கண்டோம்.அது தான் ஆச்சர்யம். அதற்க்காக தான் இந்த சிறப்பு பதிவு..
15181373_1034156696706227_7941011431958055075_n
சோழ மன்னர்கள் கட்டிய கோவிலிலே மிகவும் பெரிய பழமையான கோவில் தஞ்சை பெரிய கோவில் தான் என்று நினைத்திருந்தோம்.ஆனால் அதை விட பழமையான கம்பீரமான சிவன் கோவிலை ராஜ ராஜ சோழனின் பூட்டன் பாரந்தக சோழன் பாப்பன் குளத்தில் திருவெண் காடார் ஆலயம் என்ற பெயரில்  பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அதாவது,  தஞ்சை பிரகதிஸ்வரர் ஆலயம் கட்டுவதற்க்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டி வைத்திருக்கிறார்கள்.
இய ற்கை  சூழலில் அருமையான கலைவேலைப்பாடுகள் நிறைந்த கோவில்.
15181597_1034156750039555_3536471826809089654_n
 
ஆனால், இந்த கோவில் கட்டிய வரலாறு அங்கு நடந்த சம்பவங்கள் போன்றவைகள் வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்டன. அதைவிட சோகம் இப்போது அந்த கோவில் முழுவதும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் அந்த ஆலயம் முழுவதும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
சிலர் மட்டும் அந்த கோவிலை முடிந்த வரை கவனித்து வருகின்றனர். மத்திய தொல்லியல் துறை கவனிப்பதாக சொல்லியிருக்கிறார்களாம். வரலாற்றையே மறைத்த நம் அரசுகள் எப்படி இந்த ஆலயத்தை சரி செய்வார்கள். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் போய் பாருங்கள் அந்த ஆலயத்தின் அற்புதம் தெரியும்.
தமிழகத்தில் இது போன்ற வரலாற்று ஆலயங்கள் நிறைய உள்ளன.(கோவில் கடவுள் என்பது ஒரு புறம் இருந்தாலும்)நம் முன்னோர்கள் வாழ்ந்து விட்டு சென்ற வரலாறு காக்க பட வேண்டும் . என்பதற்க்காக தான் இந்த பதிவு.. இந்த பதிவு கோவிலுக்கு மட்டுமல்ல நம் முன்னோர்கள் பயன்படுத்திய அனைத்துமே நம்முடைய வரலாறு தான் .அப்போது தான் தமிழனின் அடையாளம் பாதுகாக்கபடும் பாதுகாப்போம்,