நெல்லை,

ந்துவட்டி கொடுமை தொடர்பாக கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைதுசெய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இசக்கி முத்து என்பவர் தனது குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கந்துவட்டி கொடுமை தொடர்பாக இசக்கிமுத்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறையும் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால்தான் இசக்கிமுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

இதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரபல கார்டூனிஸ்ட் பாலா, கந்துவட்டி கொடுமை தொடர்பாக முதல்வர் பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை மாநகர ஆணையர் ஆகியோரை வைத்து நிர்வாண கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்திருந்தார்.

இது அவதூறு பரப்புகிறது என்று நெல்லை கலெக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கார்ட்டூனிஸ்ட் பாலா சென்னையில் கைது செய்யப்பட்டார்.

இது பத்கைதிரிகையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. இந்நிலையில், இன்று  நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் பாலா  ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, பாலாவிற்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.