நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியத்திற்கு கொரோனா…

நெல்லை: திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி  திமுக எம்.பி. ஞானதிரவியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக்ததில் கொரோனா வைரஸ் பரவல்  நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நெல்லை மாவட்டத்திலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், மாவட்டத்தில், இதுவரை 9018 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 166 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7546 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், 1306 பேர் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில், கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு சேவையாற்றிய பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்,  மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும்  தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட  திமுக எம்.பி. ஞானதிரவியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் தற்போது திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.