கொள்ளையர்ளை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு ‘அதீத துணிவு’ விருது! எடப்பாடி வழங்கினார்

--

சென்னை:

கொள்ளையர்ளை விரட்டியடித்த நெல்லை கடையத்தை சேர்ந்த விவசாய தம்பதிக்கு ‘அதீத துணிவு’ விருது வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவுரவித்தார்.

நேற்று தமிழகஅரசு சார்பில் சுதந்திரன விழா கொண்டாட்டம் நடைபெற்றது. கோட்டை கொத்தளத்தில் கொடியேற்று வைத்த முதல்வர், வீரதீர செயல் உள்பட பல்வேறு செயல்களுக்கான விருதுகளை வழங்கினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் விருது, இந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத் தலைவர் கே.சிவனுக்கு அறிவிக்கப்பட்டது. அவர் நேரடியாக இந்த விருதைப் பெற இயலாததால், மற்றொரு நாளில் அவருக்கு முதல்வர் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இவ்விருது ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் 8 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் கொண்டதாகும்.

தொடர்ந்து, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை, மடிவலை பயன்பாட்டை தடுத்ததற்காக மீன்வளத் துறை உதவி இயக்குநர் ப.ரம்யாலட்சுமிக்கு முதல்வர் வழங்கினார்.

அதன்பின், முகமூடிக் கொள்ளையர்களைத் தாக்கி விரட்டியதற்காக நெல்லை மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த சண்முகவேல்-செந்தாமரை தம்பதி அதீத துணிவுக்கான முதல்வரின் சிறப்பு விருதைப் பெற்றனர். இந்த விருதுடன் ரூ.2 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

அதையடுத்து, சென்னை மாநகரில் குற்றங்களைக் குறைக்க சிசிடிவி மற்றும் பேஸ் டேக்கர் என்ற செயலியை பயன்படுத்தியதற்காக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு முதல்வரின் நல் ஆளுமை விருதை வழங்கினார்.

வேலூர் மாவட்டம் நாகநதி ஆற்றுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தின்கீழ் புத்துயிர் அளித்ததற்காக ஊரக வளர்ச்சித் துறைக்கும், ஜிஎஸ்டி முறைக்கு தேவையான தகவல்களை வழங் கியதுடன், செல்போன் செயலியை உருவாக்கிய வணிகவரித் துறைக்கும் முதல்வரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக சென்னை சாந்தோமில் இன்ஃபினிட்டி பூங்கா அமைத்த சென்னை மாநகராட்சி பூங்கா துறைக்கு நல் ஆளுமைக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது வேப் பேரி ஆபர்சூனிட்டி அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக் கான பள்ளிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த மருத்துவர் விருது கோவை முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவன இயக்குநர் செ.வெற்றிவேல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வீ.ரமாதேவி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எவரெஸ்ட் ஸ்டெபிலைசர் நிறுவ னத்துக்கும், சிறந்த சமூக பணியாளர் விருது திருவான்மியூர் பாத்வே செபின் இணை நிறுவனர் சந்திரா பிரசாத்துக்கும், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவனுக்கும் வழங் கப்பட்டது.

மகளிர் நலனுக்கு சிறப்பாக தொண்டாற்றிய சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருதை போதி மரம் தொண்டு நிறுவனத்துக்கும், சிறந்த சமூக பணியாளருக்கான விருதை எம்.சூசை மரியானுக்கும் முதல்வர் வழங்கினார்.

சிறப்பாக செயல்பட்ட உள் ளாட்சி அமைப்புகள் வரிசையில், சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சிக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டது.

சிறந்த நகராட்சிக் கான முதல் பரிசு தருமபுரிக்கும் (ரூ.15 லட்சம்), 2-ம் பரிசு வேதாரண்யத்துக்கும் (ரூ.10 லட்சம்), 3-ம் பரிசு அறந்தாங்கிக்கும் (ரூ.5 லட்சம்) வழங்கப்பட்டன.

சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு மதுரை மாவட்டம் டி.கல்லுப் பட்டிக்கும், 2-ம் பரிசு திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கும், 3-ம் பரிசு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சிக் கும் வழங்கப்பட்டன.

முதல்வரின் மாநில இளைஞர் விருதுகளில் ஆண்கள் பிரிவில் நாமக்கல்லைச் சேர்ந்த பெ.நவீன் குமார், திண்டுக்கல்லைச் சேர்ந்த மு.ஆனந்த்குமார் ஆகியோருக் கும், பெண்கள் பிரிவில் மதுரை மாவட்டம் ர.கலைவாணி ஆகியோ ருக்கும் விருதுகளை வழங்கி முதல்வர் பழனிசாமி பாராட்டினார்.