நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தில் கந்துவட்டி தம்பதி கைது!!

நெல்லை:

கந்துவட்டி காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லையில் கந்து வட்டி தொல்லை காரணமாக கணவன் மனைவி மற்றும் இரு குழந்தைகள் தீக்குளித்தனர். இச்சம்பவத்தில் 3 பேர் பலியாயினர் குடும்பமே தற்கொலைக்கு காரணமான கந்துவட்டிக்காரர் தளவாய்ராஜ் பாண்டியன், அவரது மனைவி முத்து லட்சுமியையும் போலீசார் கைது செய்தனர்.

முத்துலட்சுமியை வரும் 7-ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். தலைமறைவாக உள்ள தளவாய்ராஜ் பாண்டியனின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.