பிரதமர் மோடி முதல் ஏர்ஆசியா விமான நிறுவனம் வரை டிரெண்டிங்கான ‘நேசமணி ஹேஸ்டேக்’

பிரதமர் மோடி முதல் காணாமல் போன முகிலன் வரை PrayForNesamani ஹேஸ்டேக் டிரெண்டிங் காகி உள்ளது. அதுபோல ஏர்ஆசியா விமான நிறுவனமும், நேசமணி விரைவில் குணமடைந்த வாழ்த்துவதாக டிரெண்டிங்காகி உள்ளது. நேற்று சென்னை அளவில் டிரெண்டிங்கான ‘நேசமணி ஹேஸ்டேக்’ இன்று உலக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் அமெரிக்கா அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் வரை  அனைவரது பெயரிலும் டிரெண்டிங்காக்கப்பட்டு வருகிறது.

சிவில் இன்ஜினியரிங் லேனர்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் சுத்தியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு   தமிழக இளைஞர் ஒருவர் இது சுத்தியல் என்று அழைக்கப்படும், தட்டும்போது டங்டங் சத்தம் வரும், ஜமீன் பேலஸில் வேலை செய்யும் போது சுத்தியல் பெய்ன்ட் கான்ட்ரக்டர் நேசமணி தலையில் விழுந்துவிட்டது பாவம் என  வடிவேலு காமெடியை விளையாட்டாக பதிவிட, அது டிரெண்டிங்காகி வருகிறது.

அதற்கு பதில் கொடுத்த மற்றொரு இளைஞர் நேசமணி இப்போது எப்படி இருக்கிறார் என கேட்டு கலாய்க்க டிவிட்டரில் ட்ரெட்டானது Pray For Nesamani ஹேஷ்டேக் நேற்று முதல் டிரெண்டிங்காகி வருகிறது.

மோடி இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில் தமிழக மக்கள் டிவிட்டரில் நேசமணிக்காக பிரார்த்தனை செய்வதாகவும், “நேசமணிக்காக நேரத்தை வீணாக்காமல் சமூக ஆர்வலர் முகிலனுக்கு பயன்படுத்தலாம் எனக்கூறி முகிலன் எங்கே என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகிறது.

நேசமணி  காமெடி கதாப்பாத்திரம் இதில் காமெடி என்னவென்றால் நேசமணி யார் என்று தெரியாமலேயே மக்கள் நேசமணிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய், சூர்யா நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு காமெடி டிரெண்டிங்காகி உள்ள நிலையில்,  சென்னை மாநகர காவல்துறையும் இந்த டிரெண்டிங்கை உபயோகப்படுத்தி ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதேநேரத்தில் நேசமணிக்கு சமமாக #where is Mugilan? என்ற ஹேஷ்டேக்கும் டிவிட்டரில் ட்ரென்ட்டாகியுள்ளது.

ஏர் ஆசியா விமான நிறுவனமும் தனது பங்குக்கு, நேசமணி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என டிரெண்டாங்க்கி உள்ளது-

ஒரே நாளில் Pray For Nesamani, Wher is Mugilan, Modi sarkar2 ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டங்காகி வருவதால்,  டிவிட்டர் சமூக வலைதளம் செம ஹாட்டாக உள்ளது..

உங்களுக்காக சில டிவிட்டர் பதிவுகள்..

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-