நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் சிங்கள் டிராக் பாடல் வெளியீடு….!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் ரியோ ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும் ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் எல்லாம் முடிந்து இப்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கள் டிராக் கனா இண்டர்நெட் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nanjil Sampath, Nenjamundu Nermai undu odu raja, rio, Single Track, sivakarthikeyan
-=-