சிந்துபாத் படத்தின் “நெஞ்ச உனக்காக” பாடல் வெளியீடு….!

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சிந்துபாத்.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். இவர்களை தவிர லிங்கா, விவேக் பிரசன்னா உள்பட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் இப்படத்தில் நடித்துள்ளார் . ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாடலான “நெஞ்ச உனக்காக நான் பதிக்கி வைச்சேன்” பாடல் வெளியாகியுள்ளது. ஹரிச்சரண் பாடியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Anjali, nenje unakaga, sindhubadh, Soorya, vijay sethupathy
-=-