தேசிய கல்விக் கொள்கை :  விருப்ப மொழி பட்டியலில் சீன மொழி மாண்டரின் நீக்கம்

டில்லி

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள விருப்ப மொழிப் ப்ட்டியலில் சீன மொழியான மாண்டரின் நீக்கபட்ட்டுளது.

கடந்த 1986 ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.  அதன்பிறகு 1992 ஆம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது.   மீண்டும் இக்கொளகையம் மாற்றி அமைத்து புதிய கல்விக் கொள்கை அளிக்கப்படும் என பாஜக தனது 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.   தேர்தலில் வெற்றி பெற்றது, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

இந்த குழு பல்வேறு ஆய்வுகளைச் செய்து சென்ற ஆண்டு மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை அளித்தது.   இந்த அறிக்கை குறித்து கடும் எதிர்ப்பு எழுந்ததால் மத்திய அரசு இதை ஒத்தி வைத்தது.  தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் பல திட்டங்கள் மற்றும் சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

அவ்வகையில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக்கொள்கை 2020 ஒப்புதல் பெறப்பட்டது.  இந்த புதிய கல்விக் கொள்கைக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  குறிப்பாக இந்த புதிய கல்வி கொள்கைப்படி மும்மொழி பாடத்திட்டம் பின்பற்றப்பட உள்ளது.  இதில் இந்தித் திணிப்பு உள்ளதாகத் தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ள விருப்ப மொழி பட்டியலில் சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு சீனாவுடன் நடந்த ஒப்பந்தப்படி மாண்டரின் மொழியை இந்தியாவிலும் இந்தி மொழியைச் சீனாவிலும் கற்பிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.  அவ்வாறு இருக்க தற்போது மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.