Random image

கைலாஷ் யாத்திரை: இன்று 96 இந்தியர்கள் மீட்பு

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளத்துக்கு  சென்றவர்கள் அங்க இயற்கை சீற்றத்தில் சிக்கி நடுவழியில் தவித்தனர்.  அவர்களை மீட்கும் பணியில் இந்திய பாதுகாப்புத் துறை ஈடுபட்டு வருகிறது.

இன்று 96 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.

கைலாயத்தில் சிவனை காண பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு சென்றவர்கள், நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும்  நிலச்சரிவு காரணமாக  கைலாஷ் யாத்திரை சென்றவர்கள்  கைலாஷுக்கும் செல்ல முடியாமல் நேபாளத்துக்கும் திரும்ப முடியாமல் இடையில் சிக்கி தவித்து வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள  தவாங் (Tawang)   நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சாலை களும் சேதமடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

சிக்கியவர்களை  மீட்கும் பணியில் இந்தியா முழு வீச்சில் இறங்கி உள்ளது.  சுமார் 1500 பேர் இவ்வாறு சிக்கி இருப்பதாகவும், அவர்கள்  நேபாள நாட்டு உதவியுடன்   ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்கள் மீட்கப்பட்டு  வருகின்றனர்.

இதுவரை சுமார் 200 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக  சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட வில்லை என்றும்,  ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த புனித பயணம்  மேற்கொண்ட ஆண்டிபட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர்  மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த நிலையில், மேலும் பலர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த புனித யாத்திரையில், தமிழகத்தை சேர்ந்த 300 பேர் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.