காத்மண்டு:

தரக்குறைவு காரணமாக பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் 6 மருத்துவ பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்ள நேபாள மருந்து நிர்வாக துறை உத்தரவிட்டுள்ளது.

உத்தரகாண்டில் உள்ள திவ்யா பார்மசியில் தயாரிக்கப்பட்ட 6 மருத்துவ பொருட்களில் தரம் இல்லாதது பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. பல விற்பனை நிலையங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விற்பனை நிலையங்களில் இருந்து இவற்றை திரும்ப பெற எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்குமாறு நேபாளத்தில் உள்ள பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த 6 மருந்துகளையும் விற்பனை செய்யவும், பரிந்துரை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆம்லா சூர்ணா, திவ்ய கஸ்ஹர் சூர்னா, பகுசி சூர்னா, திரிபாலா சூர்னா, அஸ்வகந்தா, அதிவ்யா சூர்னா ஆகிய மருந்து பொருட்களை தான் திரும்ப பெற நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.