Random image

நேபாளம் – சீனா ராணுவப் பயிற்சி தற்காலிக உறவு : இந்திய ராணுவ அதிகாரி

புனே

நேபாளம் மற்றும் சீனாவின் ராணுவப் பயிற்சி என்பது இருநாடுகளுக்கிடையில் உள்ள தற்காலிக உறவு என இந்திய ராணுவ அதிகாரி பிபின் ராவத் கூறி உள்ளார்.

பிம்ஸ்டெக் அமைப்பான வஙகக் கடல் சுற்றுப்புற நாடுகளின் கூட்டமைப்பின் சார்பில் புனேவில்  ஒரு ராணுவ பயிற்சி முகாமை இந்தியா நடத்தியது.    இந்த அமைப்பை சேர்ந்த நேபாளம் இந்த பயிற்சி முகாமில் கலந்துக் கொள்ளவில்லை.  அது மட்டுமின்றி இம்மாத இறுதியில் சீனா நடத்த உள்ள ராணுவப் பயிற்சியில் நேபாளம் கலந்துக் கொள்ள உள்ளது.   இது பிம்ஸ்டெக் அமைப்பு நாடுகளுக்கிடையே பரபரப்பை உண்டாக்கியது.

புனேவில் இந்திய ராணூவ அதிகாரி பிபின் ராவத் , “இந்தியா தற்போது வலிமை பொருந்திய நாடாக உள்ளது.  மேலும் வலிமை பெற்று வருகிறது.   அண்டை நாடுகளுடன் நல்லுறவில் இருக்க விரும்புவதால் பிம்ஸ்டெக் அமைப்பில் பங்கேற்றுள்ளது.   இந்தியா ஒரு பெரிய நாடு.  நாம் எடுக்கும் முயற்சிகளை அடுத்துள்ள சிறு நாடுகள் பின்பற்ற வேண்டும்.

தற்போது வர்த்தக நலனை மனதில் கொண்டு நேபாளம் சீனாவுடன் உறவு கொண்டுள்ளது.   அதன் காரணமாகவே சீனாவுடனான ராணுவப் பயிற்சி முகாமில் நேபாளம் பங்கேற்கிறது.    இது ஒரு தற்காலிகமான உறவு மட்டுமே.  அதனால் இந்தியா இது குறித்து கவலை கொள்ள தேவை இல்லை.  பிம்ஸ்டெக் அமைப்பு மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.   எனவே நேபாளத்தின் நடவடிக்கைகள் குறித்து நமக்கு எவ்வித கருத்தும் கிடையாது” என தெரிவித்துள்ளார்.