நேபாள வெள்ளம் : மேலும் 200 இந்தியர்கள் மீட்பு

சிமிகாட்

நேபாள நாட்டுக்கு கைலாஷ் யாத்திரை சென்ற இந்தியர்களில் மேலும் 200 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாள நாட்டில் இமயமலையில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் செல்வ்து வழக்கமாகும்.   இந்த யாத்திரை உத்தராகாண்ட், சிக்கிம் வழியாக நடைபெறும்.   இந்த வருட யாத்திரை கடந்த மாதம் 11 ஆம் தேதி தொடங்கியது.

இந்த யாத்திரையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள 1500 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.   அவர்கள் கைலாஷ் யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர.  அப்போது கனமழை பெய்தது.   அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.  இதில் சுமார் 1300 பேருக்கு மேல் உணவின்றி தவிப்பதாக கூறப்பட்டது.

இவர்களில் 104 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.   தற்போது மேலும் 200 பேர் ஹெலிகாப்டர் மூலம் மிட்கப்பட்டுளனர்.  இதுவரை 304 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.   அவர்கள் நேபாளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் உளவர்களை காப்பாற்ற 7 சிறிய வகை விமானங்கள் நடவடிக்கையில் இறங்கி உள்ளன்