காத்மண்டு:

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நில சரிவுகளில் சிக்கி 36 பேர் பலியாகிவுள்ளனர்.

நேபாளத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ஜாபா, மொராங் சன்சாரி, சப்டாரி, சிராஹா, சர்லாஹி, ரவுட்டாஹட், பேங்கி, பர்தியா மற்றும் டாங் ஆகிய மாவட்டங்கள் அதிக பாதித்துள்ளது.

மொராங் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. நாடு முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வீடுகளை விட்டு விட்டு வேறு இடத்திற்கு தஞ்சமடைந்துள்ளனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசார், ராணுவம் மற்றும் ஆயுத போலீஸ் படை அதிகாரிகளை நேபாள அரசு ஈடுபடுத்தியுள்ளது.

அதேவேளையில், நேபாள அமைச்சரவை அவசரகால கூட்டம் ஒன்றை இன்று நடத்தியது. இதில். அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் டியூபா மீட்பு பணிகளை தீவிரப்படுத்தும்படி மாவட்ட நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்த முறையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முறைப்படுத்தப்படும் என உள்துறை மந்திரி ஜனார்தன் சர்மா கூறியுள்ளார்.