இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துக்கு நேபாள நாடாளுமன்றம் விரைவில் ஒப்புதல்

காத்மண்டு

ந்தியப் பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் அமைத்துள்ள புதிய வரைபடத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

நேபாள நாடு கடந்த சில மாதங்களாகச் சீனாவுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  சமீபத்தில் நேபாள பிரதமர் சர்மா ஒளி தமது நாட்டில் கொரோனா பரவுதலுக்கு இந்தியாதான் காரணம் எனக் கூறி இருந்தார்.  அவர், “சீன மற்றும் இத்தாலிய கொரோனா வரைசை விட இந்திய கொரோனா வைரஸ் அபாயமானது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் நேபாளம் ஒரு புதிய வரைபடத்தை அமைத்துள்ளது.   இதில் இந்தியப் பகுதிகளான, லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா ஆகியவை நேபாளப் பகுதிகளாகக் காட்டப்பட்டுள்ளது.  இந்த பகுதிகள் தங்கள் நாட்டுக்கு உரிமை என நேபாளம் தெரிவித்து வருகிறது. இதற்கு இந்தியா ஆதாரப் பூர்வமாக பதில் அளித்துள்ளது.

ஆனால் இந்திய எதிர்ப்பை சிறிதும் சட்டை செய்யாமல் இந்த வரைபடத்தை நேபாளம் தனது நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக அளித்துள்ளது.  இந்தப் பகுதிகள் பிரிட்டிஷார் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டதாகும்.  இந்த வரைபடத்துக்கு ஒப்புதல் வழங்கும் மசோதா தற்போது தாக்கல் செய்யாட்டுள்ளது.

வழக்கமாக நேபாள சட்டத்தின்படி ஒரு மசோதா நிறைவேற்றப்பட ஒரு மாதம் வரை ஆகும்.   ஆனால் இந்த மசோதாவைப் பல நடைமுறைகளை ஓரம் கட்டி 10 நாட்களில் நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை நேபாள அரசு எடுத்து வருகிறது.   மசோதா நிறைவேற மூன்றில் இரு பங்கு ஆதரவு தேவை என்னும் நிலையில் இதற்கு ஆதரவு அளிக்கப் போவதாக எதிர் கட்சிகளும் தெரிவித்துள்ளன.