காட்மண்டு

நேபாள ஜனாதிபதி தேர்தல் மார்ச் 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் தற்போது ஜனாதிபதியாக வித்யாதேவி பண்டாரி பதவி வகித்து வருகிறார்.   துணை ஜனாதிபதியாக நந்தா பகதூர் பதவியில் உள்ளார்.   இருவருடைய பதவிக் காலமும் விரைவில் நிறைவடைவதை ஒட்டி அந்நாட்டின் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.

அனைத்துக் கட்சிகளும் கலந்துக் கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் நவரஜ், “வரும் மார்ச் 13 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.   அதற்கு ஒரு வாரத்துக்குப் பின் துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.  இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும்,  சட்டமன்ற உறுப்பினர்களும் மட்டுமே வாக்களிக்க முடியும்”  என தெரிவித்தார்.

கடந்த டிசம்பரில் நேபாளத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது.   இதில் இடது சாரி கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சர்மா ஒளி பிரதமர் பதவி வகித்து வருகிறர்.