பாட்னா: வெள்ளத்தை தடுக்கும் பொருட்டு, லால்பாக்கெயா நதியின் கரையை வலுப்படுத்தும் பணி, பீகார் அரசால் மேற்கொள்ளப்படுவதற்கு தடை போட்டுள்ளது குட்டி நாடான நேபாளம்.

இந்தப் பணி நடைபெறும் இடம், சர்ச்சைக்குரியது என்ற காரணம் கூறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பருவகாலங்களில் இந்த நதியின் வெள்ளத்தால், பீகாரின் சில பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால், ஆண்டுதோறும் அதன் மணல் கரையைப் பலப்படுத்தி, உயரத்தை அதிகரிக்கும் பணிகள் பீகார் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும்.

தற்போதும் அப்பணிகள் நடைபெற்று வந்தன. மொத்தம் 4.1 கி.மீ. நீளமுள்ள கரையில், 3.6 கி.மீ. நீளம் வரை ஏற்கனவே பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில், தனது மேற்குப் பகுதியில் இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டுவரும் நிலையில், ஆற்றின் கரையைப் பலப்படுத்தும் பணியிலும் தடையை ஏற்படுத்தியுள்ளதானது.

இத்திட்டம், சர்ச்சைக்குரிய பகுதியில் நடைபெற்று வருவதாக கூறி, நேபாள அதிகாரிகள் இப்பணியை இடையிலேயே நிறுத்தியுள்ளனர்.

நேபாள எல்லைப் பாதுகாப்பு படைவீரர் சுட்டதில், பீகார் மாநில விவசாயி ஒருவர் பலியானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.